
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க- பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்
இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகையை மாநிலத் தேர்தல் ஆணையம் 2 மடங்காக உயர்த்தியுள்ளது. இதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 4,000, நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 2,000 காப்புத்தொகை கட்ட வேண்டும்.
பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ 1,000 காப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியினர் காப்புத் தொகையில் பாதி செலுத்தினால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.