மத்திய அரசின் குடியரசு நாள் பதக்கம்: தமிழக காவலர்களின் பட்டியல்
குடியரசு நாளையொட்டி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 939 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


குடியரசு நாளையொட்டி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 939 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு நாளன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள் மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பதக்கம் பெறும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் பதக்கம் 88 பேருக்கு, வீரதீர செயல்களுக்கான காவல் பதக்கம் 189 பேருக்கு, தகைசால் பணிக்கான காவல் விருது (பிஎம்) 662 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த 20 காவல்துறை அதிகாரிகளுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் பதக்கம்
1. ஜி. வெங்கடராமன், கூடுதல் காவல்துறை இயக்குநர்
2. சி. சிவநருள், ஐஜி(சிஐடி), தஞ்சாவூர்
தகைசால் பணிக்கான காவல் விருது (பிஎம்)
வீரதீர செயல்களுக்கான காவல் பதக்கப் பட்டியலில் தமிழக காவல்துறையினரின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...