நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாலை 6.30க்கு அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று (ஜன.26) மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாலை 6.30க்கு அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாலை 6.30க்கு அறிவிப்பு
Published on
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று (ஜன.26) மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை ஆணையம் வெளியிடுகிறது.

அதன்படி தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 அட்டவணை வெளியீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பதவிகளுக்கான விவரங்கள்

தமிழகத்தில் மொத்தமுள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 640 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சிகள் உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணைய அறிக்கை: இங்கே கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com