ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதுச்சேரியில் குடியரசு நாள் விழா: தமிழிசை கொடியேற்றினார்

குடியரசு நாள் விழாவையொட்டி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

News image
புதுச்சேரியில் குடியரசு நாள் விழா: தமிழிசை கொடியேற்றினார்
Updated On :26 ஜனவரி 2022, 3:51 am

DIN

குடியரசு நாள் விழாவையொட்டி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

தெலங்கானா மாநிலத்தில் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த அவர், புதுச்சேரி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

முன்னதாக காவலர்களின் மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை ஏற்றிவைத்து தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். 

புதுச்சேரியில் வீரதீர செயல் புரிந்த காவலர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.  கரோனா பரவல் காரணமாக புதுச்சேரி குடியரசு நாள் விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை. பொதுமக்களுக்கும் அனுதி வழங்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.