பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தமிழகத்தில் புதிதாக 29,976 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 29,976 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2022, 2:28 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 29,976 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,50,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 29,976 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 27,507 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனையில் 21 பேர், தனியார் மருத்துவமனையில் 26 பேர் என மொத்தம் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 32,24,236 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,73,185 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,359 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்கள்:

சென்னை - 5,973
செங்கல்பட்டு - 1,883
கோவை - 3,740
ஈரோடு - 1,302
கன்னியாகுமரி - 1,035
சேலம் - 1,457
திருப்பூர் - 1,787

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.