திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார்: பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:15 am

DIN

பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுகவுடனான கூட்டணி குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடினோம். தனித்துப் போட்டி என்ற கேள்விக்கு தற்போது அவசியம் ஏற்படவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்க அண்ணாமலைக்கு அதிகாரம் உள்ளது. அதிமுகவுடனான கூட்டணி சுமூகம், சுமூகம் இல்லை என்ற எந்தக் கருத்தும் நான் தெரிவிக்கவில்லை. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார். தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.