புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா: தினசரி பாதிப்பு 25 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது

தமிழகத்தில் சனிக்கிழமை 24,418 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொற்றுக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 4,508 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2022, 7:19 pm

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை 24,418 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொற்றுக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 4,508 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, சனிக்கிழமை மட்டும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,309 பேரும், திருப்பூரில் 1,649 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 27,885 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 57,846-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 8,350 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 46 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,506-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.