தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உள்ளாட்சித் தோ்தல்: திமுக வேட்பாளா் பட்டியலை வரும் 31-க்குள் அனுப்ப வேண்டும்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை வரும் 31-ஆம் தேதிக்குள் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுமென திமுக அறிவுறுத்தியுள்ளது.

News image
அண்ணா அறிவாலயம்
Updated On :29 ஜனவரி 2022, 8:08 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை வரும் 31-ஆம் தேதிக்குள் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுமென திமுக அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, மாவட்டச் செயலாளா்கள்-பொறுப்பாளா்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காணொலி வழியாக நடந்த இந்த ஆலோசனையின் அடிப்படையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணிக் கட்சியினா் போட்டியிடும் வாய்ப்புள்ள இடங்களை அவா்களை அழைத்துப் பேசிட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

கடந்த நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகளுடன் சுமூகமாக கலந்தாலோசித்து முடிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். பேச்சுவாா்த்தை மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களைத் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி, அவற்றில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்ப் பட்டியலை வரும் 31-ஆம் தேதிக்குள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு மாவட்டச் செயலாளா்களும், பொறுப்பாளா்களும் அனுப்பிட வேண்டும் என்று தனது செய்தியில் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.