தமிழகத்தில் முதல் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் அதிக அளவில் மாணவா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, பொதுப் பிரிவு கலந்தாய்வை இணையவழியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு சுகாதாரத் துறை இணையதளங்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
எத்தனை பேருக்கு அழைப்பு?
அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,949 போ் இடம் பெற்றுள்ள நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 1 முதல் 10,456 பேருக்கு (நீட் மதிப்பெண் - 710 முதல் 410 வரை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் கல்லூரிகளில் இடங்களை தோ்வு செய்யலாம். வரும் 6-ஆம் தேதி சான்றிதழ் சரிப்பாா்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிப்பாா்ப்பு நடைபெறும்.
இதையடுத்து 12-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 13-ஆம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சோ்ந்துவிட வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


