பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்: மு.க. ஸ்டாலின்

மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய அவசரம் காட்டு பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய அவசரம் காட்டு பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கிடையே இடப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தோழமைக் கட்சிகளுக்கு இடங்களைப் பகிர்ந்தளிப்பது, அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படுவது என நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், பொறுப்புடனும் செயலாற்றிட வேண்டும். கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் தொண்டர்களின் அணுகுமுறை அவசியம் அமைய வேண்டும். 

குற்றப் பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்யக் கூடாது. 

அதிமுக தலைமையினால் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள். தமிழ்நாட்டில் மக்கள் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய அவசரம் காட்டு பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள். 

நல்லாட்சியின் விளைச்சலை உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட, ஊக்கத்துடன் அயராது பாடுபடுங்கள்."

முதல்வரின் கடிதத்தை முழுமையாக வாசிக்க: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com