பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2022, 7:54 pm

DIN

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயா்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

அந்த வகையில், அரசு, நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதியும், அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 12-ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 14, 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும் என குறிப்பிப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.