‘போதைப்பொருள் பழக்கத்திற்கு  எதிரான போர்’.. விழிப்புணர்வு குறும்படத்தில் நடிகர் ஆரி!

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் சமூகத்தில் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
‘போதைப்பொருள் பழக்கத்திற்கு  எதிரான போர்’.. விழிப்புணர்வு குறும்படத்தில் நடிகர் ஆரி!
Updated on
1 min read

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் சமூகத்தில் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்  கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் சமூகத்தில் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பல்துறைகளில் சிறந்து விளங்கும்  முன்னணி நட்சத்திரங்கள், நம்பிக்கைக்குரிய திறமையாளர்கள் கொண்ட குழுவிலிருந்து அப்படிப்பட்ட படைப்பு வரும்போது, அது கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது உறுதி.

அந்த வகையில் போதைப்பொருள் பழக்கம் நம் இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டிருக்கிறது. சிறிதாக ஆரம்பமாகும் இப்பழக்கம் நம்மை அடிமையாக்கி நம் வாழ்வையே முற்றிலுமாக அழித்து விடுகிறது. போதைப்பழக்கத்தில் சிக்கிகொள்வோரை மீட்க அரசும் காவல்துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக போதைப்பொருள் பயன்பாட்டின் கெடுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது.

போதைப்பொருள் பழக்கத்திற்கு விழிப்புணர்வு குறும்படம் ‘போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான போர்’ என்ற தலைப்பில், விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெற்றது. 

இதில், டிஐஜி டாக்டர் ஆனி விஜயா, டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த குறும்படத்தை வெளியிட்டனர். 

‘‘போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான போர்’ எனும் இந்த குறும்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான ககா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை ஆர்கேஜி குரூப்பின் ஜி.சந்தோஷ் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கே.பி. இசையமைக்க ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தொழில்நுட்பக் குழுவில் தமிழ் அரசன் (எடிட்டர்), வி ஆர் ராஜவேல் (கலை), தியாகராஜன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வில்பிரட் தாமஸ் (கிரியேட்டிவ் குழு), எம்.ஜே ராஜு (ஒலி வடிவமைப்பாளர்), வீர ராகவன் (டிஐ கலரிஸ்ட்), வசந்த் (கன்ஃபார்மிஸ்ட்), வி. வேணுகோபால் (தயாரிப்பு மேலாளர்), திலக்ராஜ் எம் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்), வினோத் குமார் (ஒருங்கிணைப்பாளர்), சதீஷ் (விஎஃப்எக்ஸ்), சஜித் அலி (வசனங்கள்), யுவராஜ் (வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஆர்கேஜி குரூப் இணைந்து பொதுமக்கள் நலன் கருதி இந்த குறும்படத்தினை  வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com