ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

புதுச்சேரியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு

புதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.  

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜூலை 2022, 10:01 am

DIN

புதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். 

புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 101 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 452ஆக உயர்ந்துள்ளது.

புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை, வணிகநிறுவனங்களில் பணிபுரிவோர் 100% தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.