பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ஓபிஎஸ் வழக்கு: நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்றது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்றது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு இடையே நீதிமன்ற கட்டுப்பாடுகளுடன் ஜூன் 23ஆம் பொதுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் செல்லாது எனவும், பொதுக்குழுவுக்கு தடைக் கோரும் வழக்கை தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் தரப்பினர் இன்று மனு அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனுவில், அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பே அழைப்பிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால், எனக்கு நேற்று மாலைதான் அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com