தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்வு

வீட்டு உபயோக  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

News image

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்வு

Updated On :6 ஜூலை 2022, 3:07 am

DIN

வீட்டு உபயோக  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. இதன்படி, தொடர்ந்து எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மே 7ஆம் தேதி முதல்முறையாக ஆயிரத்தைக் கடந்த வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 1,015ஆக இருந்தது. தொடர்ந்து மே 19ஆம் தேதி ரூ. 1,018.50ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ரூ. 50 உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 8.50 குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான விலை உயர்வு காரணமாக நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.