ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இரட்டை இலை முடக்கப்படுமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.

News image
இரட்டை இலைச் சின்னம்
Updated On :7 ஜூலை 2022, 2:59 am

DIN

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறு ஓபிஎஸ் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என அந்தக் கட்சியின் முன்னாள் உறுப்பினா் பி.ஏ.ஜோசப் என்பவா் உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்குத் தொடுத்துள்ளாா்.

அதில், ‘அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் அந்தக் கட்சியின் சின்னத்தை முடக்கக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு ஜூன் 28-ஆம் தேதி மனு அனுப்பிருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமா்வு முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.