புதுவையில் சென்டாக் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

புதுவையில் நிகழாண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுவையில் சென்டாக் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்
Published on
Updated on
1 min read

புதுவையில் நிகழாண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுவை அரசு சார்பில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பாக 2022 - 2023-ம் ஆண்டுக்கான நீட் அல்லாத கலை, அறிவியல், பொறியியல், செவிலியர் கல்லூரி படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை ( ஜூலை 8) முதல் தொடங்கியது. 

இதையும் படிக்கலாம்: துப்பாக்கியால் சுடப்பட்ட அபே உயிரிழந்தார்

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அதற்கான வழிகாட்டு கையேடும் வெளியிடப்பட்டது. கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செண்டாக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20-07-2022 மாலை 5 மணி வரை இறுதி நாளாகும். 

www.centacpuducherry.in என்ற இணையதள மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com