காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே உயிரிழந்தார்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:14 pm IST

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்.

ஜப்பான் நாட்டின் என்.ஹெச்.கே தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் ஜப்பான்  நாட்டின் முன்னாள் பிரதமர் அபே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு ஜப்பானின் நாரா பகுதியில் முன்னாள் பிரதமர் பேசிக்கொண்டிருக்கையில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார். அபே பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் பின் பகுதியிலிருந்து சுடப்பட்டார்.

பின்னர், சம்பவ இடத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

67 வயதான அபே ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர். உடல் நலத்தினைக் கருத்தில் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 

துப்பாக்கியால் சுட்ட நபரை காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் நடந்த இந்த அசம்பாவிதம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.