
சென்னை நுங்கம்பாக்த்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்திலிருந்து 243 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த மே 17ஆம் தேதி கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மே 17 சோதனை நடத்தியபோது ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டிருந்ததால் அங்கு சோதனை நடத்தப்படவில்லை எனத் தெரிவித்த சிபிஐ அதிகாரிகள் தற்போது அதனை சோதனை செய்து வருகின்றனர்.
7 பேர் கொண்ட அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்த சோதனையில் விசா வழங்கியது தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.