47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு நாளை மரியாதை செலுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை நினைவுகூரும் வகையில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மரியாதை செலுத்துகிறார்.

News image
Updated On :9 ஜூலை 2022, 11:44 am

DIN

வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை நினைவுகூரும் வகையில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மரியாதை செலுத்துகிறார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 10.07.2022 அன்று (ஞாயிற்று கிழமை) காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி நாளை நினைவுகூரும் வகையில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி வேலூர் கோட்டை மைதானத்திற்கு வருகை தந்து, ஐஎன்ஏ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், என்.சி.சி மாணவர்கள் , என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சித்தலைவர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
ஆளுநர் தனது பயணத்தின் போது வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.