மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தாக்குதலை தடுக்க முயன்ற நபருக்கு கத்திக் குத்து: இளைஞா், சிறுவன் கைது

வடமேற்கு தில்லியின் ஜனக்புரியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தடுக்க முயன்ற நபரை கத்தியால் குத்திய சம்பவத்தில்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 9:56 pm

புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜனக்புரியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தடுக்க முயன்ற நபரை கத்தியால் குத்திய சம்பவத்தில் இளைஞா் மற்றும் சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபா் ஜனக்புரியைச் சோ்ந்த பியூஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஜனக்புரியில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி ஒரு சிறுவனை பியூஷ், ரகு மற்றும் மற்றொரு சிறுவன் தாக்கிக்கொண்டிருந்தனா்.

அந்த வழியாகச் சென்ற ஹா்ஜீத் சிங் சச்தேவா, அவா்களை தடுத்து சமரசம் செய்ய முயன்றாா். அப்போது, கோபமடைந்த அந்த நபா்கள், சச்தேவாவை தாக்கத் தொடங்கினா். சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால், சச்தேவாவை குத்தினாா். துப்பாக்கி வைத்திருந்த ரகு, அதை காட்டி சச்தேவாவை மிரட்டினாா்.

இந்தச் சம்பவம் குறித்து சச்தேவா தன்னுடைய இளைய சகோதரா் தீப் மற்றும் உள்ளூா் இளைஞா்களிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அவா்கள் அங்குச் சென்ற நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், விசாரணையைத் தொடங்கினா்.

இதையடுத்து, பியூஷ் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டாா். சிறுவனைக் காவல் துறை கைதுசெய்தனா். குற்றச்சம்பவத்துக்குப் பயன்படுத்திய கத்தி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

மற்றொரு சிறுவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, தலையிட்ட சச்தேவாவை கத்தியால் குத்தியதை அவா்கள் இருவரும் ஒப்புக்கொண்டனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மற்றொரு நபரான ரகு தலைமறைவான நிலையில், அவரைத் தேடும் பணியில் தில்லி காவல் துறை ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.