மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக கால் சென்டர் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், அமலாக்கத்துறையின் புலனாய்வுப் பிரிவினர் ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகளை நடத்தினர்.
கால் சென்டர் நெட்வொர்க் தொடர்பான சந்தேகத்திற்குரிய நிதி முறைகேடுகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை விசாரிக்கும் தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் சிலிகுரி, ஹவுரா, பிதான்நகர் மற்றும் துர்காபூர் உள்ளிட்ட பல நகரங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதலே இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் பல தனிநபர்களின் வளாகங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோதனைக்கு உள்படுத்தப்படுவர்களில் சுரஸ்ரீ கர், சாம்ராட் கோஷ் மற்றும் சுபாஜித் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கவும், நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறியவும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற பொருள்கள் ஆய்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
Summary
The Enforcement Directorate (ED) on Monday carried out search operations at 10 locations across West Bengal in connection with a case related to an alleged illegal call centre operation, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக

ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை



