
சென்னை: ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்கிறேன்: ஓபிஎஸ்
கட்டை, கம்புகளை வைத்தும், கற்களை வீசி எறிந்தும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பதற்றத்தை தணிக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்,
இன்று காலைமுதல் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.