ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழகத்தில் புதிதாக 2,280 பேருக்கு கரோனா; சென்னையில் 755

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,280 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :12 ஜூலை 2022, 2:59 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,280 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 2,448 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

 கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

படிக்கமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா
     
அதில், இன்று புதிதாக 2,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,06,257-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,028 ஆக உள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 2,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,49,519-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக  755 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.