முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா வைரஸ் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.  

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ''இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்கை நேரில் சென்று பார்வையிட்டார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகரான சென்னையிலும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும்  2,448 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் 13,615 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com