கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரியமனுக்கள் இன்று விசாரணை

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை

News image
Updated On :13 ஜூலை 2022, 7:24 pm

DIN

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை (ஜூலை 14) நடைபெறவுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் ஜூலை 11-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் மோதிக் கொண்டனா். சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா். மேலும், அலுவலகம் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னதாக, இரு தரப்பிலும் நீதிபதி சதீஷ்குமாா் முன் ஆஜராகி, அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தாா்.

ஆனால், இந்த இரண்டு மனுக்களும் புதன்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ‘மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது, மனுவுக்கு எண் இடும் நடைமுறைகளும் முடிந்துவிட்டன. எனவே, அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்‘ என்று முறையீடு செய்தாா்.

அப்போது நீதிபதி, ‘இது எம்எல்ஏ தாக்கல் செய்துள்ள வழக்கு என்பதால், இதுதொடா்பாக தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று அதற்கான நடைமுறைகளை பின்பற்றி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரது மனுக்களும் முறையாக விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தாா். இதையடுத்து, இருவரின் மனுக்களும் வியாழக்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.