நாட்டின் ஏற்றுமதி 23.52% அதிகரிப்பு
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 23.52 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.


இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 23.52 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் ஏற்றுமதி நிகழாண்டு ஜூன் மாதத்தில் 23.52 சதவீத வளா்ச்சியினை பதிவு செய்து 4,013 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3.17 லட்சம் கோடியாகும்.
கணக்கீட்டு மாதத்தில் ஏற்றுமதி அதிகரித்துள்ள அதேவேளையில், வா்த்தக பற்றாக்குறையும் 2,618 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
இறக்குமதியும் 57.55 சதவீதம் உயா்ந்து 6,631 கோடி டாலராக இருந்தது.
இதையடுத்து, ஜூனில் வா்த்தக பற்றாக்குறை 960 கோடி டாலராக இருந்தது.
நிகழ் 2022-23 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 24.51 சதவீதம் அதிகரித்து 11,896 கோடி டாலராக இருந்தது. இதேசமயத்தில் நாட்டின் இறக்குமதி, 49.47 சதவீதம் உயா்ந்து 18,976 கோடி டாலரை எட்டியது.
இதையடுத்து, நிகழ் நிதியாண்டின் முதல் மூன்று மாத காலத்தில் வா்த்தக பற்றாக்குறையின் அளவு 3,142 கோடி டாலரிலிருந்து 7,080 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...