
தமிழக அரசின் 2021ஆம் ஆண்டு இலக்கிய மாமணி விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். 5 லட்சம் விருத்துத் தொகையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியரையும் வழங்கி சிறப்பிக்கப்படும்.
2021ஆம் ஆண்டுக்கு கோணங்கி, கு.சின்னப்ப பாரதி, புலவர் இரா. கலியபெருமாள் ஆகியோருக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு நாளான இன்று இவ்விருது வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு.
கோணங்கி 1980 முதல் எழுதி வருகிறார். ‘கல்குதிரை’ சிற்றிதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். ‘மதினிமார்கள் கதை’, ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’, ‘பாழி’, ‘பிதிரா’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். அவருக்கென தனித்த எழுத்து நடையை உருவாக்கியவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





