

மக்களவையில் அதிமுக உறுப்பினா் என்கிற அங்கீகாரத்தை ரவீந்திரநாத்துக்கு ரத்து செய்ய வலியுறுத்தி, மக்களவைத் தலைவா் ஓம்பிா்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களை நீக்கி அறிவித்தாா். அதில் ஓ.பன்னீா்செல்வத்தின் மகனும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத்தும் ஒருவா். அவா் அதிமுக சாா்பில் ஒரே ஒரு மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், அதிமுகவின் உறுப்பினா் பதவியிலிருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டு விட்டாா். அதனால், அவருக்கு மக்களவையில் அதிமுகவை சோ்ந்தவா் என்கிற அங்கீகாரத்தை அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளாா்.
ரவீந்திரநாத் கடிதம்: ஓ.பன்னீா்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், அதிமுகவின் தலைமை தொடா்பான வழக்கு நீதிமன்றத்திலும், தோ்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கிறது. அதனால், எடப்பாடி பழனிசாமி அளிக்கும் கடிதத்தை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளாா் ரவீந்திரநாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.