சேலம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து, பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) பேராசிரியர் கோபி (45). இவர் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். சேலம், சித்தர் கோயில் பகுதியை சேர்ந்த பிஎச்டி பயிலும் மாணவிக்கு பதிவாளர் கோபி நெறியாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 24சஆம் தேதி ஆய்வுக்கட்டுரை சரி பார்க்க வேண்டி, மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்புக்கு பதிவாளர் கோபி அழைத்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்தில், மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாளர் கோபியை காவல் துறையினர் கைது செய்து, நேற்று முன் தினம் இரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், பாலியல் தொல்லை வழக்கில் சிக்கி கைதான, பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


