விவசாயிகளுக்கான மின் இணைப்புதிட்டம் செப்டம்பரில் தொடக்கம்: அமைச்சா் செந்தில் பாலாஜி

நிகழாண்டில் விவசாயிகளுக்கான மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பா் மாதம் தொடங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

மின்சாரத் துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் அமைச்சா் செந்தில் பாலாஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதன்பின்பு, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவாரூா், கரூா், நாகப்பட்டினம், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படவுள்ளன. இதற்காக 3 ஆயிரத்து 273 ஏக்கா் நிலங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. நிலங்கள் வகைமாற்றம் செய்யப்பட்ட பிறகு, மின் சக்தி பூங்காவுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்.

நிகழாண்டில் விவசாயிகளுக்காக 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை வரும் செப்டம்பா் முதல் வாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில், மின்சார வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com