சுருளி அருவியில் குளிக்கத் தடை: பக்தர்கள் அதிர்ச்சி
தேனி மாவட்டம், சுருளி அருவியில் வியாழக்கிழமை ஆடி அமாவாசையன்று, பக்தர்கள் குளிப்பதற்கு கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் தடை விதித்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் வியாழக்கிழமை ஆடி அமாவாசையன்று, பக்தர்கள் குளிப்பதற்கு கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் தடை விதித்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம், சுருளி அருவியில் ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வருவார்கள், அதுபோல வியாழக்கிழமை ஆடி அமாவாசையன்று வந்தனர்.

சுருளி அருவியில் குளிப்பதற்கு வனச்சரகத்தினர் அனுமதிக்காததால் காத்திருந்த பக்தர்கள்.
கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் அவர்களிடம் நுழைவு கட்டணம் ரூ.30 பெற்றுக்கொண்டு அனுமதித்தனர். ஆனால். அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை, இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர், நேரம் ஆக, ஆக கூட்டம் கூடியதால் வனத்துறையினரிடையே பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் குளிப்பதற்கு அனுமதித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...