காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் அதிகாலை வீட்டின் மேல் கூரை பூச்சு விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், அய்யம்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த மூன்று நாள்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வழக்கம்போல் இரவு உணவை முடித்துவிட்டு குடும்பத்துடன் படுத்திருந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் திடீரென வீட்டின் மேல் கூரை பூச்சு விழுந்தது.

இதில், மூன்றாவது வகுப்பு படிக்கும் அவரது மகன் நேதாஜியின் தலையிலும், அவரது உறவினர் மகள் மாளவிகாவின் கால்களிலும் விழுந்தது.
பலத்த காயம் ஏற்பட்டு இருவரையும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு நேதாஜி உயிரிழந்தார்.
காயமடைந்த மாளவிகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜாபாத காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டி: நடிகை விந்தியா பிரசாரம்
ஹீட் ஸ்ட்ரோக்: உணவு விநியோக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்
தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

