காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற லால்ரினுங்காவுக்கு அன்புமணி வாழ்த்து

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெரிமி லால்ரினுங்காவுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற லால்ரினுங்காவுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெரிமி லால்ரினுங்காவுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது: ''பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 67 கிலோ ஆடவர் எடை தூக்கும் போட்டியில் 300 கிலோ எடை தூக்கி தங்கம் வென்ற இந்திய வீரர் ஜெரமி லால்ரினுங்காவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

எடை தூக்கும் பிரிவில் இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம். மற்ற போட்டிகளிலும் பதக்கங்களைக் குவித்து 5 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் இந்தியா மேலும் முன்னேறுவதற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com