நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் புகுந்த மழை நீர்

மதுரையில் பெய்த தொடர் கனமழை காரணமாக மதுரையில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளக்காடாக மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

News image
Updated On :31 ஜூலை 2022, 4:19 am

DIN


மதுரையில் பெய்த தொடர் கனமழை காரணமாக மதுரையில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளக்காடாக மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

இந்தநிலையில் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்  கன மழை காரணமாக கோவில் வளாகத்திற்குள் மழை நீர் புகுந்ததால் கோவில் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த நீரில் யானை நடந்து வரும் காட்சி

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த நீரில் யானை நடந்து வரும் காட்சி

மேலும், சுவாமி சன்னதி கொடி மரம் பகுதி மற்றும் ஆடி வீதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது.  தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கோவில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர கோவிலைச் சுற்றியுள்ள ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி காணப்படுகிறது. இதனால் நடைபாதை வியாபாரிகள்,  வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.