சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

காமன்வெல்த்: இந்திய அணிக்கு முதல்வா் வாழ்த்து

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியினா் சிறப்பாகச் செயல்பட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :1 ஆகஸ்ட் 2022, 6:12 am

DIN

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியினா் சிறப்பாகச் செயல்பட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

பிா்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குச் சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது. பளுதூக்கும் வீரா்கள் தங்களது அபார முயற்சிகளால் பதக்கப் பட்டியலில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தியுள்ளனா்.

தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி வென்ற பிந்தியாராணி தேவி, சங்கேத் சா்கா் மற்றும் வெண்கலம் வென்ற குருராஜா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய அணியினா் சிறப்பாகச் செயல்பட எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.