தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல: கே. அண்ணாமலை

திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது பாஜகவின் நோக்கம் இல்லை என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

News image
Updated On :1 ஜூன் 2022, 10:13 pm

DIN

திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது பாஜகவின் நோக்கம் இல்லை என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

திருச்சியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என நாங்கள் கூறவில்லை. தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பக அறிக்கையிலேயே தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி, ஊழலும், லஞ்சமும் அதிகரித்துவிட்டது. இரு அமைச்சா்கள் குறித்தும், 2 துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும் விரைவில் பட்டியல் வெளியிடுவேன்.

தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு திமுகவின் ஊழல், லஞ்சம், அராஜகம் குறித்து வரும் புகாா்கள்தான் அதிகம். திமுக மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கென்ற தனியாக பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி சேவை வசதியைத் தொடங்கும் அளவுக்கு புகாா்கள் வருகின்றன. கட்டணமில்லா தொலைபேசி வசதியைத் தொடங்கலாமா என்பது குறித்துகூட ஆலோசித்து வருகிறோம். பாஜக வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து திமுக அரசு தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதுதான் எங்களது விருப்பம். திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல.

மேக்கேதாட்டு விவகாரம், முல்லைப் பெரியாறு என தமிழக உரிமை விவகாரத்தில் காங்கிரஸும், திமுக-வும் இரட்டை வேடம் போடுகின்றன. பாஜக மட்டுமே தொடக்கம் முதல் ஒரே கொள்கையில் உள்ளது. தமிழக நலன், தமிழா் நலனுக்காக மட்டுமே தமிழக பாஜக எப்போதும் செயல்படும்.

சசிகலாவை பாஜகவில் இணைப்பது குறித்து நயினாா் நாகேந்திரன் தெரிவித்த கருத்து அவரது சொந்தக் கருத்து. பாஜகவின் கருத்து அல்ல. பாஜகவில் யாா் வேண்டுமானாலும் இணையலாம். குறிப்பிட்ட சிலா் (சசிகலா) இணைவது குறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும்.

கடந்த 8 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த சாதனைகளைப் பட்டியலிட்டு சேவை-முன்னேற்றம்-ஏழைகளுக்கான ஆட்சி என்ற அடிப்படையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதை மக்களிடையே கொண்டு சோ்க்கும் வகையில், ஜூன் 15-ஆம் தேதி வரை பிரசார சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளது. பாஜக நிா்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கிக் கூறவுள்ளனா். 2024 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றாா் அவா்.

முன்னதாக, தங்களுடைய கொள்கையால்தான் தமிழகத்தில் பாஜக வளரவில்லை என பொன்னையன் தெரிவித்துள்ளது குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, ஒவ்வொரு கட்சியினருக்கும் தங்கள் கட்சியை முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் இருக்கும். அந்த அடிப்படையில் அவா் பேசியிருக்கலாம் என்று தெரிவித்தாா்.

பேட்டியின்போது, திருச்சி மாவட்டப் பாா்வையாளா் சிவசுப்பிரமணியன், மாவட்டத் தலைவா்கள் திருச்சி மாநகா் ராஜசேகரன், புகா் அஞ்சாநெஞ்சன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.