மக்கள் நலனுக்காக புதிய யுக்திகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தலைமை செயலகத்தில் 19 துறைகளின் செயலாளர்களுடன் நடந்த  2 ஆம் நாள் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நலனுக்காக புதிய யுக்திகள் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

சென்னை: தலைமை செயலகத்தில் 19 துறைகளின் செயலாளர்களுடன் நடந்த  2 ஆம் நாள் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நலனுக்காக புதிய யுக்திகள் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

மக்களுக்கு பயனளிக்கும் புதிய யுக்திகள் எங்கிருந்தாலும் அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கிராமப்புற குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும் வகையில் மருத்துவனை நிர்வாகம் இருக்க வேண்டும். அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும். 

படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசின் அறிவிப்புகள் கடைக்கோடி மக்களுக்கும் போய் சென்றடைய செயலாக்க வடிவம் தர வேண்டும் என்று அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அமலாக்கம் குறித்து அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com