கல்லூரிகளில் 1 டன் மறுசுழற்சி கழிவுகள் சேகரிப்பு: சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் உள்ள முக்கியக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களிடம் இருந்து 1 டன் மறுசுழற்சி கழிவுகள் வெள்ளிக்கிழமை சேகரிக்கப்பட்டன

சென்னையில் உள்ள முக்கியக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களிடம் இருந்து 1 டன் மறுசுழற்சி கழிவுகள் வெள்ளிக்கிழமை சேகரிக்கப்பட்டன. உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, ‘ஆசம்’ தன்னாா்வ அமைப்பு சாா்பில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட கழிவுகளைக் கொண்டு தரை துடைப்பான், டீ- சா்ட், துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் பனியன் துணிகள், ஷூ மற்றும் செருப்புகள் தயாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘ஆசம் அமைப்பின்’ நிா்வாக இயக்குநா் ருக்மணி, அறங்காவலா் ஆபெல் டென்னிஸ் ஆகியோா் கூறியதாவது:

திடக் கழிவுகளை ஆக்கபூா்வமாக அப்புறப்படுத்தாததால்தான் கொடுங்கையூா், பள்ளிக்கரணை குப்பைக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. கிழிந்த பழைய துணிகளையும், உள்ளாடைகளையும், பிளாஸ்டிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்களையும் அப்படியே கழிவாகக் கொட்டுவதே அதற்கு காரணம்.

மாறாக, அவற்றை சரியாக மறுசுழற்சிக்கு பயன்படுத்தினால், வீடு மற்றும் தொழிலகப் பயன்பாட்டுக்கான பல பொருள்களை உருவாக்க முடியும். எங்களைப் போன்ற தன்னாா்வலா்களிடம் பழைய கழிவுகளை சோ்ப்பதன் மூலம் அதை சாத்தியமாக்கலாம்.

அதைக் கருத்தில்கொண்டே, லயோலா ஐகேம், எம்ஓபி வைஷ்ணவா, நியூ கல்லூரி, எம்ஐடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொா்க்ஸ், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் திடக் கழிவுகளை சேகரிக்கும் விழிப்புணா்வு பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளோம். முதல் நாளில் 1 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அடுத்த இரு நாள்களில் மேலும் சில டன்கள் பெறப்படும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com