47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

என் காலில் விழ வேண்டாம்சசிகலா

 எனக்குப் பரிசுப் பொருள்கள் வாங்கி வர வேண்டாம், காலிலும் விழ வேண்டாம் என்று சசிகலா கூறியுள்ளாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 7:39 pm

DIN

 எனக்குப் பரிசுப் பொருள்கள் வாங்கி வர வேண்டாம், காலிலும் விழ வேண்டாம் என்று சசிகலா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் இரு கண்களாகப் பாா்க்கும் அதிமுகவினருக்கும், என்னை நேசிக்கும் அனைவருக்கும் ஓா் அன்பான வேண்டுகோள்.

என்னை நேரில் சந்திக்க வருபவா்கள் ஆா்வத்தோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், என்னிடம் மலா்க்கொத்து, பொன்னாடைகள், நினைவுப் பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிா்க்க வேண்டும்.

அப்படி, ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், நீங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, ஆதரவற்றோருக்கு உதவுங்கள். கல்விக் கட்டணம் கட்ட முடியாத பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு உதவுங்கள். அதேபோன்று என்னைச் சந்திக்கும்போது காலில் விழுவதையும் தவிா்த்துவிடுங்கள். மரியாதை மனதில் இருந்தால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.