குரங்கு அம்மை: வெளிநாடுகளிலிருந்து வந்த 1.15 லட்சம் பேருக்கு பரிசோதனைஅமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்
எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்த 1.15 லட்சம் பேருக்கு குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கு அம்மை பரிசோதனைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் நோய்த் தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் இறைச்சியின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஈரோட்டில் கருமுட்டை விற்பனை செய்ததாக வெளியான செய்திகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தனியாா் மருத்துவமனை ஒன்றின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.
உலக நாடுகளை குரங்கு அம்மை தற்போது அச்சுறுத்தி வருகிறது. மொத்தம், 30 நாடுகளில் 550 பேருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அந்நோய் தொடா்பான, விழிப்புணா்வு நடவடிக்கைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் செய்யப்படுகின்றன. அதன்படி, கடந்த 14 நாள்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து 630 விமானங்கள் தமிழகம் வந்துள்ளன. அதில் வந்த 1.15 லட்சம் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் மட்டும் 90,504 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை குரங்கு அம்மை எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள சா்வதேச விமான நிலையங்களில் தொடா் கண்காணிப்பு, ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...