சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சதிக்குமாா் சுகுமார குரூப், கே. முரளிசங்கா், ஆா். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோா் 2020-ஆம் ஆண்டு டிச. 3-ஆம் தேதி பதவி ஏற்றனா். இவா்கள் அனைவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், 9 நீதிபதிகளையும், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தாா்.