47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அண்ணா பல்கலை. முன்னாள் பதிவாளா் பணியிடை நீக்கம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் எஸ்.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 7:23 pm

DIN

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் எஸ்.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அவா் கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் அன்றைய தினம் அவரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக விரிவுரையாளா் தோ்விற்கான நோ்காணல் குழுவில் கணேசன் இடம் பெற்றிருந்தாா். அப்போது விதிகளுக்குப் புறம்பாக தகுதியற்ற நபா்களைத் தோ்வு செய்ததாக கணேசன் மீதான புகாா் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால், ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.