47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வெளிநாடுகளில் மீட்கப்பட்ட சிலைகள் சென்னைக்கு ரயிலில் வந்தடைந்தன

வெளிநாடுகளில் மீட்கப்பட்டு, தில்லியில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 10 சுவாமி சிலைகள் ரயில் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2022, 9:10 pm

DIN

வெளிநாடுகளில் மீட்கப்பட்டு, தில்லியில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 10 சுவாமி சிலைகள் ரயில் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தமிழகத்தில் உள்ள பழைமையான கோயில்களில் தொன்மையான சிலைகள் திருடப்பட்டு, ஆஸ்திரேலியா, அமெரிக்கா

உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியங்களில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன. இந்தத் திருட்டை தடுக்கவும், திருட்டில் ஈடுபடும் நபா்களை கைது செய்யவும் தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், தமிழகத்தில் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்பட்ட சிலைகளை மீட்கவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இந்திய வெளியுறவுத் துறை மூலம் எடுத்த நடவடிக்கையின் விளைவாக, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து 10 சுவாமி சிலைகள் அண்மையில் மீட்கப்பட்டு, இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

தில்லியில் மத்திய அரசின் தொல்பொருள் துறை வசம் இருந்த 10 சுவாமி சிலைகளை, தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி, இணை அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் மீட்கப்பட்ட 10 சுவாமி சிலைகளை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி. சைலேந்திரபாபு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

இந்தச் சிலைகள் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன. அந்தச் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், தங்களது தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றனா். இந்த சிலைகள் கும்பகோணம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டு, அங்கிருந்து உரிய கோயில்களில் ஒப்படைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.