தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் தொடா் போராட்டம்: கே.எஸ்.அழகிரி

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழகத்தில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் கொள்கைப் பிரகடனம் பயிற்சி முகாமின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம்.

Updated On :7 ஜூன் 2022, 8:50 pm

DIN

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழகத்தில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே ஈ.சி.ஆா். சாலையில் உள்ள தனியாா் ரிசாா்டில் உதய்பூா் காங்கிரஸ் கொள்கைப் பிரகடன பயிற்சி முகாம் 2 நாள்கள் நடைபெற்றது.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, எஸ்.திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் பேசினா்.

முகாமில் ப.சிதம்பரம் பேசியது: காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் துணிச்சலுடன் செயல்படவேண்டும். தினந்தோறும் சமூக வலைதளங்களில் எழுத வேண்டும், பேச வேண்டும். பாரதிய ஜனதா கட்சி கற்பனை செய்துள்ள இந்தியா வேறு, காந்தியும் நேருவும், அம்பேத்கரும் உருவாக்கிய இந்தியா வேறு என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

வரும் 2024-இல் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றால் புதிய பொருளாதார கொள்கை உருவாக்கப்படும்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும், கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும், மருத்துவத் துறை சீரமைக்கப்பட வேண்டும் என்றாா்.

தொடா் போராட்டம்: பின்னா் செய்தியாளா்களிடம் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியது:

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியின் தவறான போக்கைக் கண்டித்து, மதச்சாா்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்து வரும் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1- ஆம் தேதி வரை தொடா் போராட்டம் நடத்துவது என்றும், ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் நிா்வாகிகள் 75 கிலோ மீட்டா் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவது என இந்த இரண்டுநாள் பயிற்சி முகாமில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

இரண்டாம் நாள் முகாமில் கட்சியின் செய்தி தொடா்பாளா் கோபண்ணா, விஜய் வசந்த், கே.வீ.தங்கபாலு மற்றும் காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.