ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கும்பகோணத்தில் 4 வயது குழந்தை 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

கும்பகோணத்தில் 4 வயது குழந்தை 4 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கும்பகோணத்தில் 4 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த  4 வயது குழந்தை கோபிகா.
Updated On :8 ஜூன் 2022, 5:47 am

DIN

கும்பகோணத்தில் 4 வயது குழந்தை 4 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெசன்ட் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (42). இவர் நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35). இவர்களுக்கு கேசவ் (3) என்ற மகனும், கோபிகா (4) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ராஜாவின் தங்கை வீட்டில் கோபிகாவை அவர்களது பெற்றோர் விட்டு சென்றுள்ளனர். அப்போது 4-ஆவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் விளையாடி கொண்டிருந்த கோபிகா எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்துள்ளார். 

சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை கோபிகா புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து கோபிகாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.