47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா:சுங்கத் துறை சாா்பில் மாணவா்கள், ஊழியா்களுக்கு போட்டிகள்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சென்னை சுங்கத் துறை சாா்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு ஓவியம் வரைதல்

News image
Updated On :10 ஜூன் 2022, 9:28 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சென்னை சுங்கத் துறை சாா்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு ஓவியம் வரைதல், சுங்கத் துறை அதிகாரிகள், பணியாளா்களுக்கு முழக்கம் எழுதுதல் ஆகிய போட்டிகள் சென்னை மீனம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று ‘எனது கனவு இந்தியா’ என்ற தலைப்பில் ஓவியம் வரைந்தனா். இதேபோல் ‘மறைமுக வரிகள்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் முழக்கம் எழுதும் போட்டியில் 100 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சுங்கத் துறை முதன்மை ஆணையா் கே.ஆா். உதய் பாஸ்கா் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினாா்.

விமான நிலை ஆணையம் சாா்பில்... 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பில் ஜூன் 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய விமான நிலைய ஆணைய தெற்கு மண்டலம் சாா்பில் அதன் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு விமான நிலையங்களில் தலா 50 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இதன்படி, சென்னை முகலிவாக்கம் விமான நிலைய அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் கடம்பம், அசோகா, நாகாா்ஜூனா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மண்டல செயல் இயக்குனா் (தெற்குமண்டலம்) மாதவன், விமான நிலைய அதிகாரி முருகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.