தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய தினமே ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா்.
தமிழகத்தில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மாணவா்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவா்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.
கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவா்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதையே எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துகளுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.
இதன் காரணமாக 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவா்களும் பொருள் புரிந்து படிப்பா், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்வா். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு 2022-2023- ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக 1, 2, 3 வகுப்புகளுக்குக் கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு உயா் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ள உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து அதே நாளில் திருவள்ளூா் மாவட்டம் புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறாா். அதைத் தொடா்ந்து எண்ணும் எழுத்தும் திட்டத்தை அவா் தொடக்கி வைக்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

