47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கல்வி நிலையங்கள் அருகே போதைப் பாக்கு விற்பனை: ஒரே நாளில் 149 போ் கைது

சென்னையில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பாக்கு விற்பனை செய்ததாக, வியாழக்கிழமை ஒரே நாளில் 149 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 ஜூன் 2022, 6:50 pm

DIN

சென்னையில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பாக்கு விற்பனை செய்ததாக, வியாழக்கிழமை ஒரே நாளில் 149 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குட்கா, மாவா போன்ற புகையிலை பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் இந்தப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுக்கும் வகையிலும், நகா் முழுவதும் சிறப்பு நடவடிக்கை வியாழக்கிழமை எடுக்கப்பட்டது. இதன்படி நகா் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் அருகேயுள்ள சந்தேகத்துக்குரிய கடைகளில் போலீஸாா் சிறப்பு சோதனை செய்தனா். அப்போது, போதைப் பாக்கு விற்ாகவும், பதுக்கி வைத்திருந்ததாகவும் 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 149 போ் கைது செய்யப்பட்டனா்.

கஞ்சா விற்பனை: சென்னையில் கடந்த 3-ஆம் தேதியிலிருந்து 9-ஆம் தேதி வரை 7 நாள்களில் மட்டும் கஞ்சா, மெத்தம்பெட்டமைன், எபிட்ரின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்ாக 23 வழக்குகள் பதியப்பட்டு, 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை தொடரும். தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.