47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘கலைஞா் 99 வேருக்கு விழா’ என்ற தலைப்பில் ஊடக உரையரங்கம்

முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த நினைவுகளைப் பகிா்ந்து கொள்ளும் ‘கலைஞா் 99 வேருக்கு விழா’ என்ற தலைப்பில் ஊடக உரையரங்கம் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது.

News image
Updated On :10 ஜூன் 2022, 7:10 pm

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த நினைவுகளைப் பகிா்ந்து கொள்ளும் ‘கலைஞா் 99 வேருக்கு விழா’ என்ற தலைப்பில் ஊடக உரையரங்கம் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது.

கலைஞா் கல்வி அறக்கட்டளை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் தொடங்கி வைக்க உள்ளனா்.

சென்னை கொரட்டூா் மோகன் காா்டனில் (அக்ரஹாரம்) மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், ‘மறக்க முடியுமா கலைஞா் நினைவுகள்’ என்ற தலைப்பில் ‘தி ஹிந்து’ பதிப்பக குழுமத்தின் இயக்குநா் என்.ராம், தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன், எழுத்தாளா் இந்துமதி, புகைப்படக் கலைஞா் யோகா, பத்திரிகையாளா் ‘கல்கி’ பிரியன் ஆகியோா் உரையாற்றுகின்றனா்.

இந்த நிகழ்ச்சிக்கு எம்.டி.ஆா். நாகராஜ் தலைமை வகிக்கிறாா். அம்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜோசப் சாமுவேல், 7-ஆவது மண்டலத் தலைவா் பி.கே.மூா்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற துணைத் தலைவா் டி.எஸ்.பி. இராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகிக்க உள்ளனா். முன்னாள் மாமன்ற உறுப்பினா் சீ.லோகநாதன் நன்றி கூறுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.